வேலை தொடர்பாக சிங்கப்பூர் வந்தவர்களில் இத்தாலியர் உட்பட நேற்று மூவருக்கு கிருமித்தொற்று.

சிங்கப்பூரில் நேற்று புதிதாக மூன்று பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என கூறப்பிடப்படுகிறது.

அதில் இருவர் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்த நிரந்தரவாசி எனவும் இன்னொருவர் வேலை தொடர்பாக இத்தாலியில் இருந்து சிங்கப்பூர் வந்தவர் என்றும் கூறப்படுகிறது.

புதிதாக பாதிக்கப்பட்ட மூவரும் சிங்கப்பூரில் வந்ததிலிருந்தே வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாக சுகாதார துறை அமைச்சகம் கூறுகிறது.