மலேசியா மருத்துவமனையில் இருந்து தப்பித்த கோவிட் 19 நோயாளி…

மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து தப்பித்த கோவிட்-19 நோயாளியை காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வந்த அந்த 23 வயது ஆடவரை இன்று பிற்பகல் 3 :30 மணியிலிருந்து காணவில்லை என்று அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் இருந்த வார்டின் படுக்கையில் மருத்துவமனை அவருக்கு கையில் அணிந்திருந்த பட்டை மற்றும் கிடந்ததாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் அவரை நகர் முழுவதும் தேடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக பினாங்கு காவல்துறை பிரிவின் தலைவர் அவர்கள் கூறியுள்ளார்.