இன்று சிங்கப்பூரில் கலைகட்டும் தீமிதி திருவிழா இணையம்வழி நேரடி ஒளிபரப்பு.. லிங்க் உள்ளே…

சிங்கப்பூரில் இன்று நடைபெறும் தீமிதித் திருவிழாவில் கொரோனா காரணமாக சிறிய அளவில் நடைபெற ஏற்பாடு நடைபெற்றாலும் வழிபாடுகள் கண்டுகளிக்க இந்த அறக்கட்டளை வாரியம் நேரடி ஒளிபரப்பை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நேரடி சமயச் சடங்குகளை நிறைவேற்றுவோர் மட்டுமே ஸ்ரீ மாரியம்மன் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவர்.

சிராங்கூன் ரோட்டில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் இன்று நடைபெறும் தீமிதித் திருவிழா, கொரோனா கிருமிப்பரவல் காரணமாகச் சிறிய அளவில் நடத்தப்பட்டாலும், வழிபாடுகளைக் கண்டுகளிக்க, இந்து அறக்கட்டளை வாரியம் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது என்பது சிறப்பு மிக்கது.

firewalking.sg

heb.org.sg

bit.ly/firewalking2020

ஆகிய இணையம் வழியாக நேரடி ஒளிபரப்பை காணலாம் இன்று அதிகாலை 5 மணியளவில் பாடுகளை சடங்கு தொடங்கியது. பின்னர் காலை 9 மணி அளவில் பூக்குழி தயார் செய்யப்பட்டது. பிற்பகல் 3 மணி சக்தி கரகம் தயார் செய்யப் படுவதாகவும் நேரில் காணலாம் என்று கூறப்படுகிறது.