சிங்கப்பூரில் கழகத்தின் கீழ் தளத்தில் மாண்டு கிடந்த பெண் மற்றும் பச்சை குழந்தை..!!

சிங்கப்பூரில் உள்ள பிடோக் நார்த் ரோட்டில் உள்ள கழகத்தின் கீழ் தளத்தில் ஒரு பெண்ணும் 5 வார குழந்தை இறந்த நிலையில் இருந்தனர். இதுகுறித்து நேற்று மாலை 5.45 மணி அளவில் காவல் துறைக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை அறிவித்துள்ளது.

இந்த 35 வயது பெண்ணும் குழந்தையும் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்ததை அங்கு சென்ற மருத்துவ உதவியாளர் உறுதிப்படுத்தினர். இயற்கைக்கு மாறான மரணம் ஆக இது வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.