சிங்கப்பூரில் 150 கிலோ மீட்டர் அளவிற்கு நீள கம்பிவடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது..!!

சிங்கப்பூரில் துவாஸ் வெஸ்ட் நீட்டிப்பு தடத்தில் 150 கிலோ மீட்டர் நீள மின் கம்பி வடங்கள் முழுவதும் மாற்றப்பட்டு உள்ளது. இந்த மாதம் 14ஆம் தேதி மூன்று வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் நிகழ்ந்த சேவை தடையால் 1600க்கும் மேற்பட்ட பயணிகள் சுமார் 3 மணி நேரம் ரயில்களில் சிக்கிக் கொண்டனர்.

இதனால் இந்த நடவெடிக்கை எடுக்கப்பட்டது. ரயில்களுக்கு மின்சாரம் வழங்கும் 150 கிலோ மீட்டர் நீள அகலங்களை அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்ததாரர் ஆல்ஸ்டம் நிறுவனம் மாற்றும் என்று நில போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

இவ்வாறு மாற்றப்படும் கம்பி வடங்கள் மிகுந்த மின்காப்பு திறனை கொண்டுள்ளது என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இத்துடன் துவாஸ் வேஸ்ட் நீடிப்பில் அமைந்துள்ள மின் சுற்றுகளில் 113 திறப்பு சுருள்களை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறுவனம் மாற்றும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் தனது சொந்த செலவில் இந்த பணிகளை மேற்கொள்ளும் எனவும் கூறப்பட்டுள்ளது.