மலேசியாவில் முககவசம் அணியாத 188 பேர் கைது..!!

மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் கட்டுப்பாட்டு ஆணை மீதான விதிமுறைகளை மீறி அதன் தொடர்பில் நேற்று நாடு முழுவதும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணியாமல் இருந்ததற்கு மட்டும் 188 பேர் கைது செய்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். அரசாங்கமும் முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை பலமுறை எடுத்துரைத்தும் நிறைய பேர் இதனை பொருட்படுத்தாமல் இருந்தது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று கைதானவர்களில் 547 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கூடலில் இடைவெளியை கடைபிடிப்பது கூடுதல் நேரம் வியாபாரத் தளங்களைத் திறந்து வைத்திருந்தது. வருகையை பதிவு செய்வதற்கான உபகரணங்களை தயார் செய்து வைப்பது போன்றவற்றை தான் அவர்கள் புரிந்த குற்றங்கள் ஆகும்.

நேற்று நாடு முழுவதும் போலீசார் ஏறக்குறைய 46 47 ஆயிரம் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக இஸ்மாயில் கூறியுள்ளார்