சிங்கப்பூரில் தெங்கா வட்டாரத்தில் கட்டப்படும் புதிய வீடுகளில் 30 விழுக்காடு வரை எதிர் சக்தியை மிச்சப்படுத்த கூடிய மத்திய குளிரூட்டும் கருவி பொருத்தப்பட உள்ளன..!!

சிங்கப்பூரில் தெங்கா வட்டாரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய வீடுகளில் 30 விழுக்காடு வரை 30 சதவீதம் எரி சக்தியை மிச்சப்படுத்த கூடிய மத்திய குளிரூட்டும் கருவி பொருத்தப்பட உள்ளன. எரிசக்தியை மிச்சப்படுத்தக்கூடிய பெரிய அளவிலான மத்திய குளிரூட்டும் முறை அமைக்கப்பட உள்ளது .

அறிவார்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனி குளிரூட்டும் கருவியுடன் ஒப்பிடுகையில் எதிர்கால குடியிருப்பாளர்கள் எரிசக்தியை 30 விழுக்காடு வரை குறைவாக பயன்படுத்த வழிவகை செய்யும்.

தெங்கா வட்டாரத்தின் 5 குடியிருப்பு பேட்டிகளில் 22,000 குடும்பங்களுக்கான குளிரட்டும் முறையை இனிவரும் 10 ஆண்டுகளில் பொருத்த சிங்கப்பூர் பவர் நிறுவனம் இலக்கு கொண்டுள்ளது. அந்த திட்டம் ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் காண உள்ளது.

இதுவரை சுமார் ஆயிரம் குடும்பங்கள் மத்திய குளிரூட்டும் அமைப்பை பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன. ஒவ்வொரு குடியிருப்பும் எரிசக்தி பயன்பாட்டை கண்காணிக்க பயன்படுத்தப்படும் புதிய கருவிகள் நாளை முதல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.