சிங்கப்பூரில் மரண தண்டனையில் இருந்து தப்பினார் மலேசியா ஆடவர்..!!

சிங்கப்பூருக்கு போதை பொருளைக் கொண்டு வந்த குற்றத்திற்காக மலேசியா நாட்டை சேர்ந்த ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இவருக்கு வயது 32 இவரது பெயர் கோபி . 2014 ஆம் ஆண்டில் மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு போதை மருந்து கொண்டு வந்ததாக கூறப்பட்டது.

தான் கொண்டு வந்தது போதை பொருள் என்பது எனக்கு தெரியாது என்று கோபி நீதிமன்றத்தில் உரையாடினார். தான் கொண்டு வந்த பொருளை பற்றி அவர் வேண்டுமென்றே தெரிந்து வைத்திருக்கவில்லை என்பதே அரசு தரப்பு நிரூபிக்க தவறியதாக சொல்லப்பட்டது.

இதனால் கோபி மரண தண்டனையில் இருந்து தப்பி விட்டார். போதை பொருளை இறக்குமதி செய்ய முயற்சி மேற்கொண்டதாக இவர் மீதான குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

போதை பொருளை கொண்டு வரும் பணியை இவரிடம் கொடுத்த வினோத் என்பவர் இது ஆபத்து விளைவிக்காத போதைப் பொருள் என பொய்யாக உத்தரவாதம் அளித்துள்ளார். அதை நம்பி போதை பொருளை எங்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது . 15 ஆண்டு சிறை தண்டனையும் 10 பிரம்படிகள் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.