சிங்கப்பூரில் வேலை செய்யும் இடத்தில் மின்சாரம் தாக்கி இந்திய ஊழியர் உயிரிழந்தார்..!!

சிங்கப்பூரில் வேலை இடத்தில் மின்சாரம் தாக்கியதால் 27 வயது இந்திய ஊழியர் உயிரிழந்தார். இவர் கடந்த 15ஆம் தேதி 170 ஸ்டில் ரோட்டில் உள்ள காவல் துறையின் தேசிய சேவை நிலையத்தில் வேலையில் இருந்த பொழுது உயிரிழந்ததாக மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆடவர் விநியோக பலகையை அகற்றும் போது மின்சாரத்தால் தாக்கப்பட்டதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ஊழியரை உடனடியாக சாங்கி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக ஆனால் காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடவர் STIE நிறுவனத்தை சேர்ந்தவர். சம்பவம் குறித்து மனிதவள அமைச்சகம் விசாரணை செய்து வருகின்றது.