தனுஷ் ஆக மாறிய விஜய் டிவி தீனா!

விஜய் டிவியின் பிரபல நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் தீனா.

தீனா விஜய் டிவியின் நகைச்சுவை நிகழ்ச்சியில் தனது நகைச்சுவை திறமையை நிரூபித்து வருகிறார். தீனா பிரபல இயக்குனர்களின் திரைப்படங்களிலும் அவர் நடித்திருக்கிறார் தனுஷ் அவர்களுடன் திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார் .

சமீபத்தில் நடிகர் தீனா அவர்கள் பிரபல நடிகர் தனுஷ் அவர்களை போன்ற போட்டோ ஷூட் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் இதில் ஆடுகளம் திரைப்படத்தில் உள்ள தனுஷ் அவர்களின் கதாபாத்திரம் போன்றும் மற்றும் சமீபத்தில் வெளியாகிய அசுரன் திரைப்படத்தில் தனுஷ் அவர்களின் கதாபாத்திரத்தை போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

தீனா திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது தீனா நடித்த திரைப்படங்கள் தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக வெளிவராமல் உள்ளன.

விரைவில் அவரது திரைப்படங்கள் வெளியாகி வெற்றி வாகை சூட வாழ்த்துகிறோம்.