காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ நாளை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைய இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

பாஜகவில் இணைகிறாரா குஷ்பூ ?

பிரபல திரைப்பட நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பூ அவர்கள் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஷ்பூ அவர்கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல இருப்பதாகவும். அங்கு பா.ஜ.க தேசிய தலைவர் திரு.JP.நட்டா அவர்களை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

இந்த நிலையில் இன்று டெல்லி செல்வதற்காக விமான நிலையம் வருகை தந்த குஷ்பு அவர்களிடம் செய்தியாளர்கள் பா.ஜ.க வில் தாங்கள் இணைய போவதாக செய்திகள் வெளியாவது பற்றி கேள்வி எழுப்பினர் அதற்கு குஷ்பு அவர்கள் நோ கமண்ட்ஸ் அதுபற்றி இப்போது நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்தார்.