சிங்கப்பூரில் இன்று புதியதாக 6 பேருக்கு கிருமித்தொற்று உறுதியாகியுள்ளது…!!

சிங்கப்பூரில் உலகெங்கும் பரவி வரும் வைரஸ் அதன் தாக்கத்தை தொடர்ந்து சிங்கப்பூரிலும் ஏற்படுத்தி வருகின்றது. இருப்பினும் அதனைத் தடுக்க சிங்கப்பூர் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் சிங்கப்பூரில் இன்று புதிதாக 6 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் சிங்கப்பூரிலிருந்து நிலவரப்படி 57 ஆயிரத்து 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சமூக அளவில் ஒருவர் மட்டுமே கிருமித் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதியதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட ஆறு பேரில் 4 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். சிங்கப்பூரில் திரும்பியதிலிருந்து அவர்கள் வீட்டில் தங்கும் உத்தரவை பின்பற்றி வரும் நிலையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.