மலேசியாவில் தற்போதைய சூழ்நிலையில் இயக்க கட்டுபாட்டு ஆணை அனுமதிக்கப்படாது..!!!

மலேசிய நாட்டிலும் கொரானா தொற்று அதிகரித்து வருகின்றது. இதனால் தேசிய அளவிலான இயக்க கட்டுப்பாட்டு ஆணை தற்பொழுது எதுவும் இல்லை என தற்காப்பு அமைச்சரான இஸ்மாயில் சகோ நடைபெற்ற பேட்டியில் கூறியுள்ளார்.

பிரதமர் முகைதின் யாசின் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு என் எஸ் சி கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் இஸ்மாயில் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த செய்தியைக் கூறினார். அப்பொழுது புள்ளிவிவரங்கள் கண்டு மக்கள் பீதியடைய தேவையில்லை என்றும் ஆனால் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பை தொடர்ந்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மலேசியாவில் இயக்க கட்டுப்பாடுகள் தேவை இருப்பினும், சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே இலக்கு வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இப்பொழுதுள்ள சூழ்நிலைக்கு முழு நாட்டுக்கும் இயக்க கட்டுப்பாட்டு ஆணை அனுமதிக்க முடியாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.