மலேசியா: புதிதாக 115 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..!

மலேசியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா கிருமித்தொற்றால் 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களில் 112பேருக்கு உள்ளூரிலேயே நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்த போது மூவருக்கு , கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,034ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா கிருமித் தொற்றால்54 பேர் குணமடைந்து வசிப்பிடம் திரும்பி உள்ளனர். அவர்களை சேர்த்து இதுவரை முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து889ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி மருத்துவமனையில் 1011 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் .8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஐவருக்கு செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சுவாசித்து வருவதாக சுகாதார துறையின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

புதிதாக மரண சம்பவம் பதிவாகவில்லை. நாட்டில் கொரோனா கிருமித்தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 134ஆக உள்ளது என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.