COVID -19 சூழலால் மலேசியர்கள் 15000 பேர் சிங்கப்பூரில் வேலையிழந்துள்ளனர்…!

மலேசியா கோலாலம்பூரில் கொரோனா கிருமிப்பரவல் காரணமாக சிங்கப்பூரில் 15 ஆயிரத்து 666 மலேசியர்கள் வேலையை இழந்ததாக அதிகாரபூர்வ செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது. இவர்களில் பெரும்பாலோர் தனியார் துறையில் வேலை செய்து வந்தவர்கள் என்றும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மேலவையில் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி சேவைத் துறையில் வேலை செய்த மலேசியர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூரில் உள்ள மலேசிய தூதரகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அதற்கு அடுத்த நிலையில் தயாரிப்பு தொழில் துறையில் 3,600 பேர் ,கட்டுமானத்துறையில் 939 பேரும் வேலை இருந்ததாகவும் கூறியுள்ளார்.

கொரோனா கிருமித் தொற்றினால் சிங்கப்பூரில் வேலை இழந்த மலேசியர்களின் தரவுகள் குறித்து தோங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது சரவணன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அதேவேளையில் மார்ச் 18ஆம் தேதி நாடமாட்ட கட்டுப்பட்டு ஆணை அமல்படுத்தப்பட்டது முதல் சிங்கப்பூருக்கு திரும்பாதவர்கள் எண்ணிக்கை இந்தப் புள்ளி விபரத்தில் இடம்பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

mco அறிமுகப்படுத்தப்பட்டது முதல் மலேசியாவும் சிங்கப்பூரும் தங்கள் எல்லையை மூடி உள்ளனர்.