மலேசியா: புதிதாக 52 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..!

மலேசியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா கிருமித்தொற்றால் 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களில் 40 பேருக்கு உள்ளூரிலேயே நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

புதிதாக பதிவான சம்பவங்கள் 36 சபா மாநிலத்தில் பதிவானவை . பெந்தேங் தொற்று மையத்தில் 27பேர் , கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ,219ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா கிருமித் தொற்றால் 40 பேர் குணமடைந்து வசிப்பிடம் திரும்பி உள்ளனர். அவர்களை சேர்த்து இதுவரை முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து304ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி 10 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருக்கும் வேலையில் அவர்களில் இருவர் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சுவாசித்து வருவதாக சுகாதார துறையின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

புதிதாக மரண சம்பவம் பதிவாகவில்லை. நாட்டில் கொரோனா கிருமித்தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 130 ஆக உள்ளது என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.