மலேசியா – சிங்கப்பூர் எல்லையை விரைவில் திறப்பது பற்றி ஜோகூர் மந்திபுசார் வலியுறுத்தியுள்ளார்..!

ஜோகூர் பாரு மலேசியா -சிங்கப்பூர் எல்லையை திறப்பதை அரசாங்கம் விரைவில் பரிசீலிக்க வேண்டும் என ஜோகூர் மந்திபுசார் டத்தோ ஹஸ்னி முகமட் கேட்டுக்கொண்டுள்ளார். எல்லை திறக்கப்பட வேண்டும் என்ற ஜோகூர் மாநில அரசாங்கத்தின் பரிந்துரையை அமல்படுத்துவது பற்றிய நடவடிக்கைகளை கூட்டரசு அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று ஹஸ்னிமுகமட் வலியுறுத்தினார்.

அதுமட்டுமின்றி ஜோகூபூரில் இஸ்கந்தர் புத்திரியில் செயல்பட்டு வரும் மல்புரோப் கல்லூரியில் பயிலும் 800 முதல் 900 மாணவர்கள் தினசரி இந்த கல்லூரிக்கு வருவதில் பிரச்சினை எதிர்நோக்குவதாக கல்லூரி நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளனர் . அதுமட்டுமின்றி இதில் நாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினையை கூட்டரசு அரசாங்கம் புரிந்து கொண்டு எல்லை திறப்பதற்கான விவேகமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று ஜோகூர் ஹஸ்னி முகமட் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதுமட்டுமின்றி தினசரி இரு நாடுகளுக்கும் பயணம் செய்ய மக்கள் எதிர்நோக்கும் சிரமத்தை தவிர்ப்பதற்கு மலேசிய- சிங்கப்பூர் எல்லை திறக்கப்பட வேண்டும் என்று ஜோகூர் ஹஸ்னி முகமட்
தெரிவித்துள்ளார். அவற்றிடையே சிங்கப்பூரில் பொருளாதார வர்த்தக மற்றும் கலாச்சார அலுவலகத்தை அரசாங்கம் திறக்க வேண்டும் என ஹஸ்னிமுகமட் கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்தகைய அலுவலகம் திறக்கப்பட்டால் மலேசியாவிற்கு உதவியாக இருக்கும் ஹஸ்னி முகமட் தெரிவித்துள்ளார் . இந்த நிலையில் சிங்கப்பூர் பொருளாதார வர்த்தக மற்றும் கலாச்சாரம் தொடர்பான அலுவலகத்தை திறக்க வேண்டு ஜோகூர் மாநில அரசாங்கத்தின் கொள்கையைப் பரிசீலிக்கும் ஆய்வுஅறிக்கை விரைவில் அமைச்சரவை சமர்ப்பிக்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் ஹிசாமுதீன் உசைன் தமக்கு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

சிங்கப்பூர் மலேசியா இந்த இரண்டு நாடுகளின் மையத்தில் அலுவலகத்தை அமைப்பதன் மூலம் இவ்விரண்டு நாடுகள் மற்றும் ஜோக்கர் மாநிலத்திற்கிடையே அதிகமான ஒத்துழைப்பைப் பெற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.