மலேசியா : கிருமித் தொற்றால் இதுவரை 600-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்..!

மலேசியாவிலுள்ள புத்ரா ஜெயாவில் இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 600-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாவா தெரிவித்துள்ளார்.

அவர்களில் 400க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் பணியாற்றி உள்ளவர்கள் என்றும் மீதமுள்ளவர்கள் தனியார் மருத்துவமனை ஊழியர்கள் என்றும் டாக்டர் அடாம் பாவா தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கிருமித்தொற்றுக்கு ஆளான மருத்துவ பணியாளர்கள் பூரண குணம் அடைந்து பின்னர் அவர்கள் மீண்டும் உற்சாகத்துடன் பணிக்குத் திரும்பும் வகையில் ,பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் டாக்டர் அடாம் பாவா குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி COVID -19 தொற்றுக்கு ஆளான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முன் அவர்களை மனோவியல் ரீதியாக தயார்படுத்த உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதனை அடுத்து மிகுதியான கலைப்பு ஆள் பற்றாக்குறையால் பணிச்சுமை எதிர்நோக்கி இருப்பது, கடுமையான SOP விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய சூழ்நிலை போன்றவற்றால் மருத்துவ பணியாளர்கள் மிகுந்த மன உளைச்சலையும் மன அழுத்தத்தையும் எதிர்நோக்கி இருப்பதாக டாக்டர் தெரிவித்துள்ளார்.

அத்தகைய சூழ்நிலையில் பணியாளர்கள் தற்சமயத்துக்கு வேறு பிரிவுக்கு மாற்றபட்டிருப்பதோடு அவர்களுக்கு மன நல ஆலோசகர் சேவையும் வழங்கப்படுவதாக டாக்டர் தெரிவித்துள்ளார்.