மலேசியா: புதிதாக சபாவில் 90 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..!

மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் நேற்று கொரோனா கிருமித்தொற்றால் 95 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சபாவில் 90 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெந்தேங் தொற்று மையத்தில் 75 பேர் ,பூலாவ் தொற்று மையத்தில் 4 பேர் ,செல்மாட் தொற்று மையத்தில் மூவரும் கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். வெளிநாட்டிலிருந்து இங்கு வந்த இதர நால்வரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் .இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ,147 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா கிருமித் தொற்றால் 14 பேர் குணமடைந்து வசிப்பிடம் திரும்பி உள்ளனர். அவர்களை சேர்த்து இதுவரை முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து264ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி மருத்துவமனையில் இன்னும் சுமார் 754 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறையின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

புதிதாக சபாவில் கொரோனா கிருமித்தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா கிருமித்தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 129 ஆக உள்ளது என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.