மலேசியா: புத்தாக்கப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று மீண்டும் சாதனை படைத்துள்ளனர்..! தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியை சேர்ந்த நான்கு மாணவர்கள்..! இதோ அந்த புகைப்படம் ..!

மலேசியா கோலாலம்பூரில் செப்டம்பர் 14 -ஆம் தேதி இன்று லண்டனில் நடைபெற்ற அனைத்து உலக வர்த்தக புத்தாக்க போட்டியில் தங்கப்பதக்கம் வென்று மீண்டும் சாதனை படைத்து இருக்கின்றனர். தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியை சேர்ந்த நான்கு மாணவர்கள்.

மகா கணபதி டாஸ் , யுவிகா மகாகணபதி, கைலேஷ் சரவணன் கவிதா நாகராஜன் ஆகியோர் தான் தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இளம் அறிவியாளர்கள் .இவர்கள் எனது மண் எனது தாவரம் என்னும் கருப்பொருளில் தங்கள் படைப்புகளை வழங்கி வந்துள்ளனர்.

அதிலும் லண்டன் அனைத்துலக வர்த்தக புத்தக கண்காட்சி மையம் உலகம் அறிவார்ந்த சொத்து சம்மெளனத்தின் ஆதரவுடன் இப்போட்டி நடத்தியுள்ளது. உலகத்தரம் வாய்ந்த இப்போட்டியில் 27 நாடுகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.அதில் அமெரிக்கா பிரான்ஸ் ,தைவான், ஜப்பான், கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளும் அதில் பங்கேற்று உள்ளனர். இப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோப்பைகலோடு பிளாட்டினம் விருதை வென்றுள்ளனர். வென்று சாதித்த பிறந்த சாதனைகள் இதோ.

இதற்க்கு முன்னதாக கடந்த மாதம் கனடாவில் நடைபெற்ற ஐந்தாவது அனைத்துலக அறிவியல் புத்தகம் கண்டுபிடிப்பு போட்டியில் இந்த மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியை சேர்ந்த நான்கு மாணவர்கள்.சிறந்த புத்தக வீடியோ சிறந்த இளம் கண்டுபிடிப்பாளர்கள் விருதை வென்றதோடு கனடாவில் தங்கப்பதக்கத்தையும் சிறப்பு விருதை வென்றுள்ளனர் .

அதனைத் தொடர்ந்து தற்போது லண்டனில் நடைபெற்று இருக்கும் அந்த இறுதி சுற்றிலும் இவர் சாதனை படைத்து நாட்டுக்கும் வீட்டுக்கும் தாங்கள் பயிலும்பள்ளிக்கும் , இந்திய சமுதாயத்துக்கும் பெருமை சேர்க்கின்றன. அந்த நான்கு மாணவர்கள் .அனைத்து உலக .அரங்கில் தங்களாலும் சாதிக்க முடியும் யாருக்கும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை தாங்கள்.நிரூபித்துள்ளனர் .

உலகத்தை அச்சுறுத்திவரும் கொரோனா தொற்று காரணமாக இப்போட்டி இணையம் வாயிலாக நடத்தப்பட்டிருப்பது இதில் குறிப்பிடத்தக்கது