மலேசியா: கோலாலம்பூரில் உணவகங்கள் இன்றில் இருந்து அதிகாலை 2 மணி வரை திறந்திருக்க அனுமதி..!

மலேசியா கோலாலம்பூர் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் தலைநகரில் உணவகங்களும், பலசரக்கு கடைகளும் அதிகாலை 2 மணி வரை செயல்பட ஒரு வழியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

அதில் முக்கியமாக நள்ளிரவே கடைகளை மூடுவதால் அவைகள் நட்டத்தை எதிர்நோக்குவதாக கோலாலம்பூர் மாநகர மன்றத் தலைவருக்கு வந்த புகார்களை அடுத்து உணவகங்கள் கடைகள் செயல்படும் நேரத்தை மேற்கொண்டு இரண்டு மணி நேரம் நீடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது..

அதுமட்டுமின்றி தேசிய பாதுகாப்பு மன்றம் தீர்மானித்தபடி இன்று தொடங்கிய உணவகங்களும் பலசரக்கு கடைகளும் அதிகாலை 2 மணி நேரம் வரை செயல்படலாம் என கூட்டரசு பிரதேச அமைச்சர் டான் ஸ்ரீ அணுவார் மூசா தெரிவித்துள்ளார்.

அதில் நடமாட்ட கட்டுப்பாடு ஆணை காலம் முடிவடையும் வரை கோலாலம்பூரில் உணவகங்களும் பல பலசரக்கு கடைகளும் நடப்பிலுள்ளது போல நள்ளிரவு 12 மணியோடு வியாபாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று கோரி கோலாலம்பூர் மாநகர – மன்றம் இதற்கு முன்பு கூறியிருந்தது. ஆனால் பல தரப்புகளில் குறைகளை அறிந்து அவை செயல்படும் நேரத்தை நீடிக்க தமது தரப்பு சம்மதிப்பதாகவும் அமைச்சர் டான் ஸ்ரீ அணுவார் மூசா தெரிவித்துள்ளார். இதன்வழி அவர்களது வருமானம் அதிகரிக்கும் என்றும் தான் நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்