மலேசியா- சிங்கப்பூர் எல்லை திறப்பது குறித்து டிசம்பர் மாதம் முடிவு அறிவிக்கப்படும் ..!

மலேசியாவில் உள்ள ஜோகூர் பாரு செப்டம்பர் 11ம் தேதி முதல் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் நிலைமையை பொறுத்து மலேசியா சிங்கப்பூர் எல்லை திறக்கப்படும்.

எல்லை மீண்டும் திறப்பதற்கு முன் இந்த காலகட்டத்தில் புதிதாகக் கொரோனா கிருமிப்பரவல் தொற்று உட்பட பல்வேறு அம்சங்களும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தெரிவித்துள்ளார்.

மலேசியா சிங்கப்பூரில் எல்லை திறப்பதற்கு முன் நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்ட கட்டுப்பாடு ஆணையின் போது புதிதாக தொற்று பரவுவதைத் தடுப்பதில் சுகாதாரமும் தொடர்ந்து முன்னுரிமை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி மலேசியா சிங்கப்பூரில் விரைவாக திறக்கப்பட வேண்டும் என்றும் ஜோகூர் மந்திரிபுசார் ஹஸ்னி முகமது ஆலோசனை தெரிவித்துள்ளார் என்றும் அது குறித்து கருத்துரைத்த அடாம் பாபா முதலில் டிசம்பர் மாதம் வரை இவ்விரு நாடுகளின் கொரோனா கிருமி தொற்று பரவல் நிலைமையை சுகாதார அமைச்சகம் கண்காணித்து அவற்றை ஆராய வேண்டி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஜோகூர் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டு இருந்தால் மலேசியா சிங்கப்பூரில் எல்லை விரைவாக திறக்க வேண்டும் என்றும் ஜோகூர் மந்திரிபுசார் ஹஸ்னி முகமது தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார்