மலேசியா: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும் காலகட்டத்தில் சுல்தான் அப்துல் ஹலீம் விமான நிலையம் வழக்கம் போல் செயல்படும்…!

மலேசியா ஆலோர் ஸ்டார் செப்டம்பர் 11 ஆம் தேதி கெடா, கோத்தா ஸ்டார்ரில் நிர்வாக அடிப்படையில் கடுமையாக்கப் பட்டிருக்கும் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும் காலகட்டம் முழுவதும் சுல்தான் அப்துல் ஹலீம் விமான நிலையம் வழக்கம் போல் செயல்படும் என்று மலேசிய விமான நிலைய நிறுவனமான மலேசியா ஏர்போர்ட் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டிருக்கும் காலகட்டம் முழுவதும் சுல்தான் அப்துல் ஹலீம் விமான நிலையம் பயன்படுத்த விரும்பும் பயணிகள் அரச மலேசிய போலீஸ் படையின் அனுமதியை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

covid -19 பரவலில் நிர்ணயிக்கப்பட்ட சீரான விதிமுறைகளை sop பயணிகள் அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று மலேசிய ஏர்போட் வலியுறுத்தி உள்ளது. அது மட்டுமின்றி கூடல் இடைவெளியை கடைப்பிடித்தல், முக கவசம் அணிதல்,மை செஜாதெரா கியூ .ஆர் குறியீட்டைப் பயன்படுத்தல் போன்ற விதிமுறைகல் அதில் அடங்கும் என்றும் மலேசிய விமான நிலையம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனைக் குறித்து சந்தேகங்கள் எதுவும் இருந்தால் அதனை பயணிகள் தங்கள் விமான பயண நிறுவனத்தை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதனிடையே கடுமையாக்கப்பட்ட நடமாட்டம் கட்டுப்பாட்டு ஆணையம் அமலில் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் சுல்தான் அப்துல் ஹலீம் விமான நிலையத்தில் வாயிலாக கோத்தா ஸ்டார் மாவட்டத்துக்குள் நுழையவோ, வெளியேறவோ முடியாது என அந்த விமான நிலைய நிர்வாகம் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அதே சமயம் கோத்தா ஸ்டார் மாவட்டம் முகவரியை கொண்டிருப்பவர்கள் போலீஸ் அனுமதி இல்லாமல் வெளியே செல்ல முடியாது என்றும் வெளியிலிருந்து உள்ளே வரவும் முடியாது ,ஆனால் மற்ற மாநிலங்கள் அல்லது மாவட்டங்களை சேர்ந்த பயணிகளுக்காக இருந்தால் அவர்கள் விமான நிலையத்தை பயன்படுத்த முடியும் என்றும் லோக்மான் கூறியுள்ளார்.