மலேசியா: covid -19 கிருமிப்பரவலால் தாவாவில் உள்ள 4 பள்ளிகள் 14 நாட்களுக்கு மூடப்படுகின்றன..!

மலேசியாவில் உள்ள தவாவில் செப்டம்பர் 11 ஆம் தேதி இன்று தொடங்கி வரும் 25ஆம் தேதி வரை நான்கு பள்ளிகள் மூடப்படுகின்றன. அவற்றில் தொடக்கப்பள்ளிகள் 3 மற்றும் 1 இடைநிலைப்பள்ளி மூடப்படுகின்றன.

தாவாவ் சிறைச்சாலையில் covid -19 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பது அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளை மூட முடிவு எடுத்திருப்பதாக தாவாவ் பகுதிக்கான சுகாதார அதிகாரி டாக்டர் ஜி.நவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனால் இணையம் வாயிலாக கற்றல் -கற்பித்தல் நடவடிக்கைகளை தொடர இருப்பதாகவும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வகுப்பை வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் தகவல்களை அறிந்து கொள்ளும்படி தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி தாவாவ் சிறைச்சாலையில் நள்ளிரவு முதல் கடுமையாக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையம் அமுலுக்கு வந்துள்ளது. இதனால் வரும் 25-ஆம் தேதி வரை இது அமலில் இருக்கும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் நேற்று அறிவித்துள்ளார்.