மலேசியா : கூட்டரசு பிரதேசத்தில் நீர் நிர்வாக அமைப்பு உருவாக்கப்படும் என்று அமைச்சர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார்..!

மலேசியா கோலாலம்பூரில் செப்டம்பர் 10-ஆம் தேதி இருந்து நீர் விநியோகம் தடை ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதர்க்காக நீர் நிர்வாக அமைப்பு ஒன்று உருவாக்கப்படும். நேற்று அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான ஆலோசனை கொண்டுவரப்பட்டது என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார். குறித்து அமைச்சர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி நீண்ட காலத்திற்கு சிலாங்கூர் நீர் நிர்வாகத்தை மட்டுமே கூட்டரசு பிரதேசம் தொடர்ந்து நம்பியிருக்க முடியாது அதனால் கூட்டரசு சொந்தமான நீர் நிர்வாக அமைப்பை உருவாக்குவதற்கு நேரம் வந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மலேசியாவில் சொந்த நீர் நிர்வாகத்தை கொண்டிருப்பதன் மூலம் கூட்டரசு பிரதேசம் அதிக நன்மையைப் பெற முடியும் என்றும் சொந்தமாக நிறுவனத்தையும் கூட்டரசு பிரதேசம் நிர்வகிக்க முடியும் என்றும் கூட்டரசு பிரதேசத்தில் அதிகமான நீர் வளங்களான ஏரிகள் மற்றும் ஆறுகள் இருப்பதால் நீர் சுத்திகரிப்பு முடியும் என்றும் அல்லது சுத்தகரிக்கப்பட்ட நீரை வாங்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.