மலேசியா : இந்துதர்ம மாமன்றம் சிறப்பு கலந்துரையாடலில் பங்கேற்பவர்களுக்கு இந்துதர்ம பாடநூல்கள் இலவசம்..!விவரம் உள்ளே …!

மலேசியாவில் உள்ள மலாக்கா வில் செப்டம்பர் 10-ஆம் தேதி மலேசியா இந்துக்களிடையே இந்து சமய கல்வியை வலியுறுத்தும் நோக்கில் மலேசிய இந்துதர்ம மாமன்றம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. அதில் இந்து தர்ம பாடநூல்கள் என்பது அவற்றில் மிக முக்கியமான ஒன்று.

அதனை தமிழ்ப்பள்ளிகளுக்கும் சமய வகுப்புகள் நடத்துபவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வரும் இந்த பாடநூல்கள் அனைத்து இந்துக்களையும் குறிப்பாக மாணவர்களை சென்றடைய வேண்டும் என்பதே இந்த மாமன்றத்தின் முக்கிய நோக்கம்.

அந்த வகையில் மலேசியா இந்து தர்ம மாமன்றம் இந்து தர்ம சமயக்கல்வி தேசிய துணைக்குழு மலாக்காவில் உள்ள ஆலயங்கள் அரசு சாரா இயக்கங்கள் ஆகியவற்றோடு இணைந்து சிறப்புக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வு செப்டம்பர் 12ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் ஆலய நிர்வாகத்தினர் அரசு சாரா இயக்கத்தினர் அல்லது அவற்றின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்க வரவேற்கப்படுகின்றனர். இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்பவர்கள் இந்து தர்ம பாட நூல்களை இலவசமாக பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 016 -2085551 என்ற எண்ணில் திரு கே கே ரமேஷையும் 011 -36909440 என்ற எண்ணில் செல்வி இளவரசியும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.