மலேசியா: தண்ணீர் விநியோக தடை முடிவுக்கு வந்துள்ளது..! மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்..!

மலேசியாவில் உள்ள சீலாங்கூரின் 7 வட்டாரங்களில் தடைப்பட்டிருந்த தண்ணீர் விநியோகம் இன்று காலை முதல் முழுமையாக சீரடைந்து உள்ளது.

கிள்ளான், ஷா ஆலாம், பெட்டாலிங் ,கோல லங்காட் , உலு சிலாங்கூர், கோல சிலாங்கூர், கோம்பாக்,கோலாலம்பூர் ஆகிய ஏழு வட்டாரங்களில் கடந்த வியாழக் கிழமையில் இருந்து அட்டவணையிடப் படாத தண்ணீர் விநியோகம் தடை ஏற்பட்டிருந்தது.

தண்ணீர் விநியோகம் தடையால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய போதிலும் பொறுமையோடு காத்திருந்த பயனீட்டாளர்களுக்கு அயேர் சிலாங்கூர் வின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் நிறுவனம் தொடர்புப் பிரிவு தலைவர் எலினா பாசேரி கூறினார்.

தண்ணீர் வந்துவிட்டது என்ற சந்தோசத்தில் நீர் வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்தும் படி அவர்கள் ஆலோசனை கூறினார் .

இதன்மூலம் 7 வட்டாரங்களில் ஏற்பட்டிருந்த அட்டவணையிடப் படாத தண்ணீர் விநியோகம் தடையால் 1300 இடங்கள் பாதிக்கப்பட்டிருந்தன.

தற்போது தண்ணீர் திறந்துவிட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.