சிங்கப்பூரிலேயே முழுவதுமாக திறக்க ஜோகூர் மாநில முதல்வர் ஹஸ்மி முகமது வலியுறுத்தியுள்ளார்…!

Covid-19 கொரோன கிருமித் தொற்று காரணமாக மலேசியா சிங்கப்பூர் இடையேயான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது சிங்கப்பூர் எல்லையை மீண்டும் முழுமையாக திறப்பதற்கான நடவடிக்கைகளை மலேசியா துரிதப்படுத்த வேண்டும் என்று ஜோகூர் மாநில முதல்வர் முகமது வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பிரதமருடன் பேசியதாகவும் எல்லையை விரைந்து திறக்கும் வகையில் இரு நாட்டு அரசாங்கங்கள் உடன் இணைந்து ஒரு சாதகமான வழிகளை கண்டறிவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஜோகுர் பகுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் சிங்கப்பூரில் அதிகம் பணியாற்றி வந்தனர். 35,000 க்கும் மேற்பட்ட ஜோகர் வாசிகள் வேலை இழந்து தவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிங்கப்பூர் பொருளாதாரத்தை சார்ந்தே ஜோகர் பொருளியல் பொருளாதாரம் இருக்கும் நிலையில், எல்லை வழியாக அன்றாட சிங்கப்பூர் சென்று வரும் 2,50,000 க்கும் மேற்பட்டோர்க்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் நாட்டின் சுங்க வருவாய் 50 சதவீத பங்களிப்பைக் கொண்டு உள்ளதாலும், எல்லையை திறக்க வேண்டிய அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்த நற்செய்தியை மலேசிய அரசு விரைவில் அறிவிக்கும் என்று நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு அத்தியாவசியமான வர்த்தக அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக மலேசிய, சிங்கப்பூர் இடையே பயணம் செய்த இரு தரப்பு பயண ஏற்பாடுகள் திட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடதக்கது.