மலேசியா: COVID -19 KMC மருத்துவ மையம் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது..! அதன் விவரம் இதோ..!

மலேசியாவில் உள்ள அலோர் ஸ்டார்- கெடா மருத்துவ மையமான KMC செப்டம்பர் 9 ஆம் தேதி இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு உள் மற்றும் வெளிநோயாளிகளுக்கு மூடப்படுகிறது. மருத்துவ மையத்தில் COVID -19 சம்பவங்கள் உறுதியாக இருப்பது அடுத்து அங்கு துப்புரவு மற்றும் கிருமி நாசினி திரவத்தைக் கொண்டு சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் அம்மையம் மூடப்படுவதாக மருத்துவ இயக்குனர் டாக்டர் கமாரூஸாமான் அலி தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையை தற்காலிகமாக மூடுவது பற்றியமுடிவை மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி அவர் அதனை முடிவெடுத்துள்ளார் .

அதனால் மருத்துவ மையம் மூடப்பட்டுள்ள போதிலும் கே எம் சி யின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் வழக்கம் போல் செயல்படும் என்றும் ஆயினும் தொடர்பு சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள்,பெர்லிஸ் அல்லது பினாங்கு கேபிஜே மருத்துவ மையங்களுக்கு அனுப்பப்படுவர் என்றும் மருத்துவ மையம் தெரிவித்துள்ளது.

அதில் நேற்று காலை 11 மணி வரை நிலவரப்படி கேம்ஸ் மருத்துவ மையத்தில் 18 பணியாளர்களுக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவ மையத்தின் 619 பணியாளர்கள் மீது இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக டாக்டர் கமாரூஸாமான் அலி தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி நோய்த்தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகி உள்ள பணியாளர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் அடையாளம் காணப்பட்ட அதற்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர் .

இதனால் மருத்துவ மையத்தின் அனைத்து சேவைகளும் வரும் 13ம் தேதி மீண்டும் வழக்கமான நிலைக்கு திரும்பும் என டாக்டர் கமாரூஸாமான் தெரிவித்துள்ளார்.