மகிழ்ச்சியான செய்தி..! சிங்கப்பூர் – மலேசியா இடையேயான எல்லை கடந்த பயணத்துக்கு நாளை தொடங்கி விண்ணப்பிக்கலாம்..!

கொரோனா பிரச்சினை காரணமாக மலேசியா – சிங்கப்பூர் எல்லை கடந்த பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், எல்லை கடந்த மலேசியா மற்றும் சிங்கப்பூர் பயணம் நாளை விண்ணப்பிக்கலாம் என்று மலேசிய குடிநுழைவு தலைவர் தெரிவித்துள்ளார்.

வர்த்தக நோக்கத்துக்காக அதிகாரப்பூர்வ பயணங்களுக்கும், எல்லையை கடக்க அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. நீண்டகால குடியுரிமை அனுமதியை வைத்திருப்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட முதலாளிகள் பதிவு செய்யவேண்டும்.

மலேசியர்கள் விண்ணப்பிக்கும் இனையதளமானது.. https://mtp.imi.gov.my/myTravelPass/main என்ற இணைய வழியாக சிங்கப்பூர் செல்ல விண்ணப்பிக்கலாம்.

சிங்கப்பூரர்கள் விண்ணப்பிக்கும் இனையதளமானது..
https://safetravel.ica.gov.sg/ என்ற இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.