சிங்கப்பூர்: கொவிட்-19 கிருமிப் பரவலால் சோர்ந்திருக்கும் மக்களுக்கு வண்ணங்களால் உற்சாகமூட்டி, கொண்டாட்ட உணர்வை ஏற்படுத்தியுள்ளார்..!

சொந்த கலை நிறுவனத்தை நடத்திவரும் குமாரி இதுவரையில் பல கலைப் படைப்புகளை ‘பே‌‌ஷன் ஆர்ட்ஸ்’ எனும் மக்கள் கழக சமூக கலைப் படைப்பாளர்களின் குழுவினர் சார்பில் உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில் கொவிட்-19 கிருமிப் பரவலால் சோர்ந்திருக்கும் மக்களுக்கு வண்ணங்களால் உற்சாகமூட்டி, கொண்டாட்ட உணர்வை ஏற்படுத்தியுள்ளார். பாங்கிட் அடுக்குமாடிக் குடியிருப்புகள் 255, 270 ஆகியவற்றில் எழிலோடு அசைந்தாடும் இந்தப் பதாகைகள், அவ்வட்டார குடியிருப்பாளர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கின்றன.

இதனால் பதாகைகளில் அவ்வட்டார குடியிருப்பாளர்கள் இடம்பெற்றிருப்பது சிறப்பு அம்சம். கொண்டுள்ளது.

இந்த பதாகையில் ஒற்றுமை’, ‘மக்கள்’ என்ற கருவை மையப்படுத்தி உருவாக்கும் கலைப்படைப்பில் மக்களின் ஈடுபாடு இருக்க வேண்டும் என்ற நோக்கில் குமாரி அமிர்தாவும் அவருடன் இப்பணிகள் பங்கெடுத்த ஸூல்கனாயேன் டியோவும் சமூக ஊடக வழி இத்திட்டத்தை புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.இதன்மூலம் குடியிருப்பாளர்கள் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

சவாலான சூழலில் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி செல்ல வேண்டும் என்ற நோக்கில் வானவில் வடிவம் ஒரு புளோக்கில் இடம்பெற்றது.

இவர்களுடைய கலைபடைப்பு அமைப்புகளினால் பண்டிகைக்காலங்களில் ‘சிங்கே’ போன்ற தேசிய அளவிலான நிகழ்ச்சிகளிலும் இடம்பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி ‘ஹார்ட்ஸ் இன் யூனிடி’ எனும் திட்டத்தின் கீழ், குமாரி அம்ருத்தா போன்ற கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான மொத்தம் 11 தேசிய தினக் கொண்டாட்ட பதாகைகள் ஆண்டு இறுதி வரை தீவிலுள்ள வெவ்வேறு வட்டாரத்தின் அடுக்குமாடி புளோக்குகளுக்கு அழகு சேர்க்கும்என்று தெரியவந்துள்ளது.