சிங்கப்பூர்: covid-19 கிருமி பரவலை முறியடிப்பதில் முக்கிய பங்காற்றும் முன் களப் பணியாளர்களுக்கு முதல் மரியாதை…!

சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமிப் பரவலை முறியடிப்பதில் முக்கிய பங்காற்றும் முன்களப் பணியாளர்களின் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த ஆண்டின் தேசிய அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அணிவகுத்துச் செல்லும் ராணுவ வாகனங்கள் கூ டெக் புவாட் மருத்துவமனை, செங்காங் பொது மருத்துவமனை, இங் டெங் ஃபோங் மருத்துவமனை, சிங்கப்பூர் எக்ஸ்போ போன்ற இடங்களுக்கு கொரோனா எச்சரிக்கையுடன் கடக்குவார்கள். அப்போது வாகனத்திலுள்ள படை வீரர்களுக்கு மரியாதை செலுத்துவார்கள்.

அது மட்டுமன்றி ராணுவ வாகனங்கள் மற்றும் படை வீரர்களுடன் கொவிட்-19 தொற்றுநோய் முறியடிப்பில் பங்களித்துவரும் சுகாதார முன்களப் பணியாளர்களும் இந்த ஆண்டின் தேசிய தின அணிவகுப்பில் இடம்பெறுகின்றனர். என்றும் இதில் தெரியவந்துள்ளது.

மக்கள் தங்கள் வீட்டுக்கு அருகிலேயே அணிவகுப்பு கண்டுகளிக்கும் வகையில் வசதியாக வடக்கு, வடகிழக்கு, தெற்கு,தென்கிழக்கு, மேற்கு ஆகிய ஐந்து திசைகளிலும் அணிவகுப்பு செல்லும் என்றும் இதில் குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவர்கள் செல்லும் ஒவ்வொரு பாதையிலும் கிட்டத்தட்ட 16 ராணுவ வாகனங்கள் என மொத்தம் 66 வாகனங்கள் இந்த ஆண்டின் அணிவகுப்பில் இடம் பெறுகின்றன என்பது தெரியவந்துள்ளது.

18 ஆண்டுகளாக படையில் சேவையாற்றும் திரு வெங்கடேஸ்வரன் மூன்றாவது முறையாக தேசிய தின அணிவகுப்பில் கலந்து கொள்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது.

“கடந்த 2018ஆம் ஆண்டில் மேரி மவுண்ட் கான்வண்ட் பள்ளியை பிரதிநிதித்து தேசிய தின அணிவகுப்பின் நிகழ்ச்சி அங்கத்தில் என் மகள் வ‌‌ஷ்மித்தா பங்கேற்றார்.

அணிவகுப்பின் நிறைவில் அதிபர் திருவாட்டி ஹலிமா யாக்கோப் என் மகளின் பங்களிப்பை அங்கீகரித்து அவரை கட்டிப்பிடித்தது மனதை நெகிழச் செய்தது. நாளை ஒளிவழியில் என் பங்களிப்பை பார்த்து என் 12 வயது மகள் பெருமிதம் கொள்வார்,” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் எம்.இ.2 அதிகாரி திரு ம. வெங்கடேஸ்வரன்.