மலேசியா – சிங்கப்பூர் போன்ற இரு நாடுகளின் எல்லையை திறக்கும் முடிவுக்கு சுற்றுலாத் துறையினர் வரவேற்றனர் என அறிவிப்பு …!

மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற இருநாடுகளின் எல்லைகளை திறக்கும் முடிவுக்கு சுற்றுலா துறையினர் ஆதரவு அளித்துள்ளனர். இந்நிலையில் இந்த முடிவு வர்த்தகத்திற்கு நன்மையை தரக்கூடியது என்றாலும் உடனடியாக தங்களுக்கு ஆக்கபூர்வமான பலனை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை சுற்றுலா துறையினர் நம்பிக்கை வைக்கிறர்கள்.

இந்நிலையில் வர்த்தகம் மற்றும் அதிகாரப்பூர்வ பயணிகளுக்கு மட்டுமின்றி சுற்று பயணிகளுக்கும் இரு நாட்டின் எல்லைகளை கடப்பதற்கு அனுமதிக்கப்பட்டால்தான் சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சியை காணமுடியும் என மலேசியா சுற்றுலா வழிகாட்டியின் தலைவர் லியோங் மற்றும் துணை தலைமை செயலாளருமான நிகில் வோங் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் மற்றும் மலேசியா எல்லைத்திறக்கும் முடிவின் அடுத்தக்கட்டமாக சுற்றுலாப்பயணிகள் பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தற்போது எல்லை திறப்பதற்கு இரண்டு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளதால் இதர வகை பயணிகளுக்கும் எல்லை கடந்து சிங்கப்பூருக்குள் செல்வதற்கும் அதேபோல் சிங்கப்பூர் சுற்றுலா பயணிகள் மலேசியா செல்வதற்கும் உதவும் வகையில் அமையும் என நம்பிக்கை அளித்துள்ளார் வோங்