மலேசியா: மதுபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என அமைச்சரவை அறிவிப்பு …!

மதுபோதையில் வாகனங்களை ஓட்டுவதால் மக்கள் பெரிதும் பாதிப்பு அடைகின்றனர். “குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் நாட்டை கெடுக்கும் வீட்டையும் கெடுக்கும்”.குடிப்பதால் அவர்கள் மட்டுமல்லாது சுத்தியிருப்பவர்களும் பாதிப்பு அடைவார்கள். இதனை அனைத்தையும் கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சகம் அபராதம் போன்ற வழிமுறைகளை கையாண்டு வருகிறார்கள்.

இதில் கோலம்பூரில் ஜூலை 15 போதைப் பொருள் மற்றும் மதுபோதையுடன் வாகனங்கள் ஓட்டுவோர் கண்டுப்பிடிக்கப்பட்டால் அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் வகையில் சாலை போக்குவரத்து சட்டத்தின் 41 ஆவது விதிகள் முதல் 45 ஆவது விதிவரை திருத்தங்கள் செய்வதற்கு கொள்கை அளவில் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

சட்டத்துறை தலைவர் அலுவலகம் உத்தேச மசோதாவின் நகலை ஆராய்ந்து வருவதகாவும்,ஜூலை 17 ஆம் தேதி இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ வி கா தெரிவித்துள்ளர்.

44 வது விதியின் கீழ் தற்போது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ,திருத்தும் சட்டம் கீழ் குற்றம் புரிபவகர்களுக்கு 15 ஆண்டுகளும் மேலும் குற்றம் புரிந்தால் 20 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்றும் அமைச்சர் டத்தோஸ்ரீ வி கா தெரிவித்துள்ளர். அதனைதொடர்ந்து புரிபவர்களுக்கு 20,000 ரிங்கிட் அபராதமும் ,முதல்முறையாக குற்றம் புரிந்தால் 1,00 ,000 ரிங்கிட்டாகவும் அடுத்தடுத்து குற்றம் புரிந்தால் 1,50 ,000 ரிங்கிட்டாகவும் அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. .