மலேசியா: MCO காலத்தில் வேலை பாஸ் வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் விடுமுறையில் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதியில்லை என அறிவிப்பு..!

கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது mco காலத்தில் வேலை பாஸ் வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் விடுமுறையில் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கவில்லை என்று கூறியுள்ளார் இஸ்மாயில். வெளிநாடுகளுக்கு செல்வதற்கான அவர்களது விண்ணப்பங்களை அரசாங்கம் பெற்றுள்ளது. எனினும் அரசாங்கம் அனுமதி வழங்கவில்லையென தற்காப்புத்துறைக்கான முதன்மை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளார்.

கொரோனா பரிசோதனையில் தனிமைப்படுத்திக்கொண்ட 255 தனிப்பட்ட நபர்கள் 13 ஆவது நாளில் இரண்டாவது பரிசோதனை மேற்கொள்ளத் தவறியதாகவும் இஸ்மாயில் கூறியுள்ளார். இதனை அடுத்து ஒருவேளை கிளினிக் செல்ல மறந்து இருந்தாலும் தங்களது வீட்டிற்கு அருகிலுள்ள கிளினிக்கில் இரண்டாவது பரிசோதனை மேற்கொள்ளும்படி இஸ்மாயில் சப்ரி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இரண்டாவது பரிசோதனை மேற்கொள்ள தவறினால் ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் அல்லது அவர்கள் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படுவார்கள் .எனவே சம்மந்தப்பட்ட அனைவரும் சுகாதாரத்துறையுடன் தொடர்புகொண்டு அவர்களின் விதிமுறைகளை கேட்டு செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

புத்ரா ஜெயா ஜூலை 14 – முதல் பிரிவு வேலை பாஸ் வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் MCO ஆணையின்போது விடுமுறையில் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதில்லை என கூறியுள்ளார்.