மலேசியா: சம்பள உதவித்திட்டத்தின் கீழ் 520 கோடி ரிங்கிட் விநியோகிக்கப்பட்டது குறித்து டத்தோ ஸ்ரீ சரவணன் தகவல் வெளிட்டுள்ளார்…!

சம்பள உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஜூன் 30 தேதி வரை சமூக பாதுகாப்பு இயக்கமான சொக்சோ 520 கோடி ரிங்கிட் விநியோகித்துள்ளது. இந்தத்திட்டத்தின் கீழ் சேவைத்துறையிடமிருந்து அதிகமான விண்ணப்பங்கள் அதாவது 92,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக மனித வள அமைச்சர் சரவணன் கூறியுள்ளார்.

26 லட்சம் தொழிலாளர்களுக்கு விநியோகிப்பதற்காக தகுதிபெற்ற 3,19,000 முதலாளிகள் அந்த நிதிகளை பெற்றதாக சரவணன் கூறியுள்ளார். இதுபோன்று அவர் நாடாளுமன்ற வாய்மொழி கேள்வி நேரத்தின் போது வழங்கிய பதிலில் சரவணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அனைத்து துறைகளிலும் வேலையில்லாமல் தொழிலாளிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் ஊழியர்களை நிலைநிறுத்தி கொள்வதற்காகவும் நிறைய சிரமத்தை எதிர்நோக்குகிறது நிறுவனம். கொரோனா தொற்று காரணமாக பொருளாதரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியதால் வேலையில்லாத விகிதமும் அதிகரித்துள்ளது .

கொச்சோ தொழிலாளர்கள் காப்புறுதிட்டத்தின் கீழ் ஜூன் 30 தேதிவரை வேலையிழந்ததையும் சரவணன் சுட்டிக்காட்டியுள்ளார். புள்ளிவிவர அடிப்படையில் வேலையில்லாத விகிதம் 5 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார் சரவணன் .