மலேசியாவில் இருந்து 179 பயணிகளுடன் மீட்பு விமானம் திருச்சிக்கு இயக்கப்பட்டது -விவரம் உள்ளே .

மலேசியாவில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகத்தின் சார்பில் நேற்று திருச்சிக்கு மீட்பு விமானம் இயக்கப்பட்டது இந்த விமானத்தில் மொத்தம் 179 பயணிகள் பயணித்தனர்.

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர் .தற்போது இதன் முதல் மூன்று கட்டங்கள் நிறைவேற்றப்பட்டு தற்போது நான்காம் கட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது .

மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் இயக்கப்பட்டது இந்த பயணிகள் விமானத்தில் பயணித்த 129 பேருக்கும் சிங்கப்பூரில் முதல் கட்ட உடல் வெட்ப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .

விமானத்தில் இருக்கக்கூடிய பயணிகள் அனைவரும் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்பு அவர்களுக்கு வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்த படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.