திருத்துறைப்பூண்டி மருத்துவமனை, மருத்துவர்கள் பற்றி தவறான பதிவை வெளியிட்ட முகநூல் பக்கம் .

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் பற்றிய தவறான பதிவை வெளியிட்டது திருத்துறைப்பூண்டி பெயரைக்கொண்ட முகநூல் பக்கம் ஒன்று. பின்பு அந்த பதிவு திருத்தப்பட்டு சரியான பதிவு மீண்டும் பதிவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது கோவிட்19.வைரஸ் தொற்று காலங்களில் மருத்துவர்களின் சேவையும் அவர்கள் படும் துன்பத்தையும் பற்றி விளக்கி முகநூல் பதிவு வெளியிட்டுள்ளார் திருத்துறைப்பூண்டியின் பிரபல குழந்தை நல மருத்துவர் திரு.ராஜா அவர்கள், மேலும் தவறான கருத்தை பதிவிட்ட முகநூல் பக்கத்திற்கு பதிலளிக்கும் வகையிலும் அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார் .

திருத்துறைப்பூண்டி குழந்தை நல மருத்துவர் திரு. ராஜா அவர்களின் முகநூல் பதிவிலிருந்து .

தவறான தகவலை பதிவிட்டதிற்கு வருத்தம் தெரிவித்து உண்மை நிலையை உடனே ஏற்றுகொண்டு விளக்கமளித்த திருத்துறைப்பூண்டி வளரும் நகரம் முகநூல் பக்க நிர்வாகிகளுக்கு இந்திய மருத்துவ கழகம்,திருத்துறைப்பூண்டி சார்பாக நன்றி!

சமீப காலமாக மருத்துவர்களை தரகுறைவாக விமர்சனம் செய்வது என்பது அதிகரித்து வருவது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது…

கெரசின் குடித்த குழந்தைகள் பாய்சன் நோயாளிகளாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பபடுவதுதான் நடைமுறை…

11/2 வயது குழந்தை மிகுந்த ஆபத்தான உயிர்கொல்லியான மண்ணென்ணையை குடிக்கும் அளவிற்கு அலட்சியமாக இருந்த அந்த தாயைவிட அந்த நேரத்தில் பணியில் இல்லாத மருத்துவர்கள் மோசமானவர்களா???

அரசு மருத்துவமனையோ தனியார் மருத்துவமனையோ எல்லா இடங்களிலும் மருத்துவம் என்பது ஒன்றுதான்…விளம்பர நோக்கில் உதவி செய்கிறேன் எனும் போர்வையில் ஆடியோ வெளியிட்டு மருத்துவர்களை மிரட்டிய ஒரடியம்புலம் அரசியல் பிரமுகர் மீது மருத்துவமனை மற்றும் மருத்துவபணியாளர்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியபட்டுள்ளது தெரியுமா???

கொரனா பேரிடர் நேரத்தில் மிக குறைந்த உதவியாளர்களுடன் உயிரை பணயம் வைத்து எங்கள் மருத்துவமனைகளை இயக்கி வருவது போதாதா???

நகர மருத்துவர்களில் 80% பேர் 50-80 வயதானவர்கள்…அவர்களால் முடிந்தவரை மருத்துவ பணியை செய்து கொண்டு இருக்கிறார்கள்தானே???

நமது ஊரை விட எந்த ஊரில் குறைந்த கட்டணம் பெறபடுகிறது???
பக்கத்தில் இருக்கும்
மன்னை,ஆரூர்,வேதையை விட குறைவான மருத்துவ செலவே நம் ஊரில் ஆகிறது என்பது உண்மைதானே???

எதை வைத்து எந்த அடிப்படையில் திருத்துறைப்பூண்டியில் மருத்துவ கொள்ளை நடக்கிறது என நினைக்கிறீர்கள்???

ஒரு காலத்தில் 24 மணி நேரமும் இயங்கி வந்த மருத்துவர்கள் பெரும்பாலோரின் மருத்துவ விரோத போக்கால் தங்கள் வேலை நேரத்தை குறைத்துகொண்டனர்…பாதுகாப்பில்லாத,சேற்றை ்அள்ளி தூற்றும் நன்றி இல்லாத சமூகத்திற்கு உடல் நலனை கூட பொருட்படுத்தாமல் ஏன் உழைக்க வேண்டும் எனும் எண்ணம் மருத்துவர்களுக்கு ஏற்பட்டதற்கு யார் காரணம்???

குறையே இல்லாத மனிதர்கள் உலகில் உண்டா? எங்கள் மீது தவறோ குறையோ இருந்தால் சுட்டி காட்டுவதற்கு வேறு முறையோ வழியோ இல்லையா???

மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என ஒருபுறம் பேசுவது
மறுபுறம் திட்டமிட்டு வேண்டுமென அசிங்கபடுத்துவது என்பது தொடர்ந்தால் பாதிக்கபடபோவது யார்???

கடந்த 10-15 வருடங்களாக புதிய மருத்துவர்கள் நமது ஊருக்கு வர தயங்குவதும்,வந்தாலும் குறுகிய காலத்திலேயே வெளியூருக்கு சென்று விடுவது ஏன்??? இங்குள்ள சூழ்நிலை சரி இல்லாத காரணத்தால் தானே???

நாங்கள் முன்காலங்களில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளை எல்லாம் மறந்து தான் மருத்துவத்தை செய்து கொண்டிருக்கிறோம்! இன்று எங்களிடம் இருக்கும் பணம்,சொத்துக்கள்,
வசதி,வாய்ப்புகள் அனைத்துமே மக்களாகிய நீங்கள் எங்கள் சேவைக்காகவும் உழைப்புக்காகவும் கொடுத்த ஊதியம்தான்…
அதை என்றும் மறக்கமாட்டோம்…
நாங்களும் மனிதர்களே என்பதை உணர்ந்து எங்களை அசிங்கபடுத்தாதீர்கள்…
அது போதும் எங்களுக்கு……

ஆதலால் நண்பர்களே!
ஊர் கூடி தான் தேரை இழுக்க வேண்டும்! ஒன்று படுவோம்! வென்று காட்டுவோம்!!