மலேசியாவில் உள்ள பாகிஸ்தான் விமானிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்..!!

மலேசியாவில் விமானிகள் போலி சான்றிதழ்கள் வைத்து வேலை பார்த்து ஏமாற்றியது வெளிவந்ததை தொடர்ந்து, மலேசியாவில் உள்ள அந்த பணியில் அமர்த்தப்பட்ட பாகிஸ்தான் விமானிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மலேசியாவில் உள்ள விமானிகளில் இருபதுக்கும் குறைவானவர்களே பாகிஸ்தான் விமானிகள் என மலேசிய நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. விமான சேவை நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ் பாகிஸ்தான் விமானிகள் யாருமில்லை என்று அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் விமானிகள் உள்ளூர் விமான பள்ளிகள், விமான கழகங்கள், பயிற்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரிவதாக மலேசிய விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. மொத்த விமானங்களில் 33 சதவீதத்தினர் போலி தகவல்களை அளித்த குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்பின் உலகெங்கும் பல நாடுகளில் பாகிஸ்தான் விமானிகளின் சான்றிதழ் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.