மலேசியாவில் மேலும் மூன்று மாதங்களுக்கு மின்சார கட்டணம் தள்ளுபடி..!!

உலகெங்கும் அச்சுறுத்தி வரும் குரானா வைரஸ் மலேசியாவில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மார்ச் மாதம் முதல் மலேசியாவின் பிரதமரினால் அறிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் பொருளாதார உற்பத்தி மற்றும் ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட மின்சார உதவி திட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த மின்சார கட்டண தள்ளுபடி தொடர்ச்சி ஆகும், என்று எரிசக்தி மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் சம்சுல் அனுவார் நசார தெரிவித்துள்ளார்.

கிருமி தொற்று தொடங்கிய காலத்தில் மார்ச் மாதத்தில் ஆரம்பித்த நடமாட கட்டுப்பாடு ஆணை காலகட்டத்தில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரித்ததை தொடர்ந்து பொது மக்களின் வறுமையை குறைப்பதற்காக இந்த தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டன.

இந்த தள்ளுபடிகள் மூலம் 27 மார்ச் 20 அன்று பிரதமர் அறிவித்த பொருளாதாரத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட மின்சார கட்டணம் தள்ளுபடிகள் கூடுதலாக தீபகற்ப மலேசியாவில் சுமார் 7.6% வீட்டு உபயோக மின்சார பயனர்கள் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை 2 முதல் 5% 50 சதவீதம் வரையிலான மின்சார கட்டண தள்ளுபடி அவர்கள் அனுபவிப்பார்கள் என்று கூறினார். இது ஜூன் 20 அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட கூடுதல் மின்சார உதவித் திட்டத்தின் கீழ் 601 முதல் 900 கிலோ வாட்டுக்கு மின்சாரம் பயன்படுத்தி 10 சதவீத தள்ளுபடியில் பெறத் தொடங்கிய பயனர்களுக்கு பொருந்தும்.

மேலும் மலேசியாவின் சாபா மற்றும் சரவாக் வீட்டு உபயோகப் மின்சார பயனர்கள் 31 டிசம்பர் 2020 வரை மின்சார கட்டணங்களுக்கு 2 சதவீத தள்ளுபடியில் பெறுவார்கள் இது சபாவில் சுமார் 5 லட்சத்து 20 ஆயிரம் பயனருக்கும், சரவாக் நகரில் 5 லட்சத்து 80 ஆயிரம் பலருக்கும் பயன் அளிக்கும் வகையில் இருக்கும் என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த மாதம் மலேசியாவில் 300kmv க்கும் குறைவான மின்சாரப் பயன்பாட்டைக் கொண்டு மலேசியத் தீபகற்பத்தில் உள்ள வீட்டு உபயோக மின்சார பயனர்கள் ஏப்ரல் மே மற்றும் ஜூன் 3 மாதங்களுக்கு இலவச மின்சாரத்தை அனுபவிப்பார்கள். என்றும் 300kmv க்கும் மின்சக்திக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் பயனாளர்கள் ஒரு மாதத்திற்கு RR 77 ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மதங்களுக்கும் RM231 மின்சார கட்டணம் தள்ளுபடிகள் என்றும் சம்சுல் அறிவித்துள்ளார்.