மலேசியாவில் உள்ளூர்வாசிகளுக்கு எந்த தொற்றும் இல்லை..!!

covid -19 பரவி வரும் இந்த அசாதாரணமான சூழலில் மலேசியாவிலும் அதன் தாக்கம் இருந்தது. தற்போது மலேசியாவில் தலைநகரான கோலாலம்பூரில் நான்கு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக நேற்று உள்ளூரில் கிருமித்தொற்று சம்பவம் எதுவும் பதிவாகவில்லை. இந்த செய்தியை மலேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளை பரிசோதித்த பிறகு வெளிநாட்டில் இருந்து திரும்பிய மலேசியர் ஒருவருக்கு மட்டும் கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, என அமைச்சகம் தெரிவித்துள்ளது.