துரித உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்.!! இனிமேல் இதை சாப்பிடாதீர்கள்.!!

தற்போது உள்ள வேகமான காலகட்டத்தில் அனைவருக்கும் எது செய்ய வேண்டுமென்றாலும் அவசரம். அதிலும் குறிப்பாக உணவுகளை சமைப்பது மிகவும் அவசரம் காண்பிக்கிறார்கள். இதனால் சீக்கிரம் எந்த உணவு ரெடி ஆகும் அந்த உணவை நாம் சமைத்து சாப்பிட்டு செல்கிறோம். இதனால் ஏற்படும் உடல் உபாதைகள் பற்றி நாம் கவலைப் படுவதே கிடையாது.

எப்பொழுதுமே இயற்கைக்கு மாறாக நாம் எது செய்தாலும் அது நமக்கு பின்விளைவை ஏற்படுத்தும் அதுபோலவே உணவும். அவை இயற்கையான முறையில் நன்கு சமைத்து சாப்பிடுவது தான் நமக்கு நல்லது. ஆனால் தற்போதுள்ள அவசரமான சூழ்நிலையில் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கும் உணவுகளை சமைத்து உண்டு வருகிறோம்.

எடுத்துக்காட்டாக பிரஷ் ஜூஸ் சாப்பிடுவது மிகவும் உடலுக்கு நல்லது அதிலேயே அதிக சத்தும் உள்ளது.ஆனால் பெரும்பாலானோர் பருகுவது இல்லை, அதற்கு பதிலாக குளிர் பானங்கள் போன்றவற்றை பருகி வருகிறோம். அதுபோலவே வெட்டப்பட்ட பூண்டுகள் வெட்டப்பட்ட காய்கறிகள் ஆகியவற்றை பாக்கெட்டுகள் விற்பனை செய்வதை நாம் பார்க்கின்றோம். இதுபோன்று சமைப்பது பெரும்பாலானோருக்கு வேகமாக சமைப்பதற்கு உதவினாலும் ஆனால் உடல்நலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.

குறிப்பாக நம் உணவில் உள்ள கலோரிகளை அது குறைக்கும் மேலும் உடல் பருமனை அதிகரிக்கும், உடல் உபாதைகள் அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அவ்வப்போது சமைத்து அவ்வப்போது சாப்பிடுவதே நமக்கு நன்மை அளிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இன்ஸ்டன்ட் உணவு வகைகளை சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.