தூங்கும் பொழுது கை மரத்து போகின்றதா.? அப்போ காரணம் இதுதான்.!!

பொதுவாக ஒருவருக்கு தூக்கத்தில் கைகள் மரத்துப் போவது பொதுவான மற்றும் நம் வாழ்நாளில் குறைந்தது ஒரு முறையாவது நாம் அனுபவித்த ஒரு செயலாகும். பொதுவாக ஒருவர் தூங்கும் போது தன்னை அறியாமலேயே தன் கைகளின் மேல் தலையை நன்கு அழுத்தம் கொடுத்து தூங்கி விடுவர். இதனால் கைகளில் உள்ள நரம்புகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு தற்காலிகமாக செயல் இழக்கின்றன இதனால் அவர்கள் கை மரத்துப் போகலாம்.

நரம்புகள்தான் நம் மூளையில் உள்ள உறுப்புகளுக்கும் ஏனைய உறுப்புகளிலிருந்து மூளைக்கும் கட்டளைகளை எடுத்துச் சொல்லும். ஒரு கட்டத்தில் இவை செயல் இழப்பதால் இந்த தகவல் பரிமாற்றத்தில் தடை ஏற்படுகிறது. எனவே நம்மால் உணர முடிவதில்லை இந்த உணர்வு வந்ததும் நாம் நம் கைகளை தனியாக எடுத்து வைக்கும்போது சுர்ரென்று நம் கைகள் ரத்தம் பீய்ச்சி அடிக்கும் உணர்வை நாம் அனுபவித்த அடுத்த கொஞ்ச நேரத்தில் நம் கைகளை நாம் உணர ஆரம்பித்து விடுவோம். இதற்கு காரணம் நம் நரம்புகளுக்கு ரத்தம் சென்று அதன் ரத்தம் கடத்தும் பணியை மறுபடியும் தொடர்வதால் தான்.

இது சாதாரண பிரச்சினையாகத்தான் இருக்கக்கூடும், பலர் பயப்படவேண்டியதில்லை இருப்பினும் சர்க்கரை நோய் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு இந்த பிரச்சணை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். இந்த குறைபாடு பொதுவாக விட்டமின் பீ குறைவாக உள்ளவர்களுக்கு ஏற்படும்.

இதனால் விட்டமின் பி அதிகமாக எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. இந்த பிரச்னையை வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் மாற்றிக்கொள்ளலாம். உதாரணமாக தூக்கத்தில் தேவையில்லாமல் கைகளுக்கு அழுத்தம் கொடுக்காமல் தூங்குவது, விட்டமின் பி சத்து அதிகம் உள்ள உணவுகளை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது போன்றவை ஆகும்.