வளர்ந்து வரும் வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷாலின் அப்பா அம்மாவை பார்த்து உள்ளீர்களா.? இதோ அரிய புகைப்படம்.!!

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இவர் முதல் படத்திலேயே தேர்ந்த நடிகர் என்ற பெயரைப் பெற்றார். இதன் பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தன. அனைத்து படங்களிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார் விஷ்ணு விஷால் .

ஒரு சில காரணங்களால் இவரின் படங்கள் சரிவர வெற்றியை பெறவில்லை அதன் பிறகு தன் மார்க்கெட்டை இழந்த விஷ்ணு விஷால் மீண்டும் ராட்சசன் படத்தின் மூலம் இழந்த மார்க்கெட்டை மீண்டும் பெற்றார். ராட்சசன் படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்றே கூறலாம்.

இந்நிலையில் தற்போது விஷ்ணு விஷால் FIR என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதன் பிறகு இவருடைய அடுத்தடுத்த படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் விஷ்ணு விஷால் தன் டுவிட்டர் பக்கத்தில் தன் அப்பா அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.