சிங்கப்பூர் மக்களுக்கு ஒரு நற்செய்தி.!! சிங்கப்பூரிலுள்ள பல்கலைக்கழக பட்டதாரிகள் கல்விக் கடனையும் அதற்கான வட்டியையும் ஓர் ஆண்டுக்கு செலுத்த வேண்டாம்.!!

தற்போது கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்ட பலருக்கு சிங்கப்பூர் அரசாங்கம், அதற்கான சலுகைகளை செய்து வருகிறது. அது போல சிங்கப்பூரில் உள்ள பல்கலைக்கழக பட்டதாரிகள் கல்விக்காக வாங்கிய கடனையும் வட்டியையும் செலுத்தவேண்டியது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அவர் இந்த நிறுத்தி வைக்கும் திட்டம் ஓர் ஆண்டுக்கு நீடிக்கும், என்றும் சிங்கப்பூரிலுள்ள கல்வி அமைச்சர் திரு. ஓங் காங் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வேலை தேடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள பட்டதாரி மாணவர்கள். தங்கள் நேரத்தை பயனுள்ள முறையில் கழிக்க வேண்டும் எனவும் தொடர்ந்து கல்வி சம்பந்தமான திட்டங்களை அவர்கள் மேற்கொள்ளவேண்டும்,எனவும் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள உயர் கல்வி நிலையங்கள் பட்டதாரி மாணவர்களுக்கு இரண்டு முதல் நான்கு பாட தொகுதி வகுப்புகளை இலவசமாக வழங்க உள்ளனர். பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க உயர் கல்வி நிலையங்களும் அரசாங்க அமைப்புகள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் திரு. ஓங் சவால் மிக்க இந்த காலகட்டத்தில் மாணவர்கள், பயிற்சி வாய்ப்புகள் மிகவும் தடை பட்டுள்ளன இருப்பினும் மாணவர்கள் அதனால் பாதிப்படையாமல் இதற்கு குறைந்த மாற்று திட்டங்களையும், அதற்கான உயர்கல்வி நிலையங்கள் தான் பெரிதும் முயற்சி செய்து வருவதாகவும் கல்வி அமைச்சர் கூறினார்.