சிங்கப்பூரில் தேசிய தினத்தை முன்னிட்டு சிறப்பு அம்சங்களைக் கொண்ட 12 பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட உள்ளன.!!

சிங்கப்பூரில் வருகிற தேசிய தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர் மக்களுக்கு 12 பொருட்கள் உள்ளிட்ட ஒரு பை அன்பளிப்பாக வழங்கப்பட்ட உள்ளது.அந்தப் பையில் கிருமி நாசினி வெப்பமானி முககவசம் தேசியக்கொடி தவிர சிங்கப்பூரின் ஒட்டுமொத்த மக்களின் அன்பையும் வெளிப்படுத்தும் விதமாக பொருட்கள் இருக்கும்
என அரசு தெரிவித்துள்ளது.

இந்தப் பையைத் தயாரிக்க செலவு 2 வெள்ளி 40 காசு ஆகும். இந்தப் பையை வேண்டாம் எனத் தெரிவித்தவர்களின் கணக்கில் கொண்டு சிங்கப்பூர் மக்கள் தொகையில் 80 விழுக்காட்டு குடும்பங்களுக்கு போதுமான வகைகள் தயாரிக்கப் பட்டுள்ளன, என டாக்டர் இங் கூறியுள்ளார்.

இந்தப் பை மிகவும் மீண்டும் மீண்டும் உபயோகிக்கக் தக்க வகையில் சுருட்டி மடக்கி வைக்க வைக்குமாறு தயாரிக்கப்பட்டுள்ளது. இம்முறை குடியிருப்பாளர்கள் வீட்டிலிருந்தே குடியரசு தினத்தை கொண்டாடுவார்கள் என்பதால், தண்ணீர் போத்தல்கள், பிளாஸ்டிக் பைகள் குப்பைகள் போன்றவை இருக்காது. தேசிய தினத்தை முன்னிட்டு மக்கள் தேசியக் கொடியை கையில் வைத்து அசைக்கக் கூடிய தேசியக்கொடிகள் அந்தப் பையிலிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.