ஒருவழியாக நயன்தாராவிற்கு டும்டும்டும்.!! நல்ல செய்தி சீக்கிரமே.!!

தென்னிந்திய சினிமாவில் நம்பர்-1 நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் தமிழில் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அடுத்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக நிறுத்திக்கொண்டார்.

ஆனால் இவர் வாங்கிய நல்ல பெயர் இவர் சினிமாவிற்குள் வந்த ஒரு சில காலங்களிலேயே மாறிவிட்டது. நடிகர் சிம்புவுடன் காதலில் விழுந்தார். இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் பல வெளிவந்தன. அதன் பிறகு சிம்பு-நயன்தாரா பிரிந்தனர்.பிறகு நடனப்புயல் பிரபுதேவாவின் காதலித்து அந்த காதல் திருமணம் வரை சென்று அந்த காதலும் பிரிந்தது. இதனால் மிகவும் மன வேதனைக்கு உள்ளான நயன்தாரா சில காலங்கள் சினிமாவை விட்டு விலகினார்.

மீண்டும் புதுமுக இயக்குனர் அட்லி இயக்கிய ராஜாராணி என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு இவர் சினிமா வாழ்க்கையில் தொடர்ந்து வெற்றிப் பயணம் தான். தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி பிசியான நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்த விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் ஒன்றாக வெளியே சுற்றும் புகைப்படங்கள் பல வெளிவந்தன. ஆனால் இதுகுறித்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் எதுவும் கருத்து கூறவில்லை. சமீபத்தில் காதலர் தினத்தன்று நாங்கள் இருவரும் ஐந்து வருடங்களாக காதலிக்கிறோம் என்பதை உறுதி செய்தார் விக்னேஷ் சிவன்.

தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது குறித்து அவரது ரசிகர்கள் எப்படியாவது கல்யாணம் நடந்தால் சரி என வாழ்த்து கூறி வருகின்றனர்.