மலேசியாவிலிருந்து தமிழகத்திற்கு வந்தே பாரத் திட்டத்தின் மூலம் ஜூன் மாதத்தில் 5 விமானங்கள் இயக்கப்படுகிறது!

உலகம் முழுவதும் ஊரடங்கு காரணமாக சிக்கியுள்ள இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இந்தியா மீட்டு வருகிறது .

வந்தே பாரத் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் விமானங்கள் இந்தியாவிற்கு இயக்கப்படுகின்றன .

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு வெளிநாட்டில் இருந்து இந்தியா செல்லும் வந்தே பாரத் திட்டத்தின் விமான கால அட்டவணைகள் மற்றும் அனைத்து விவரங்களையும் மின்னஞ்சல் மூலம் அந்தந்த நாட்டு இந்திய தூதரகங்கள் பயணிகளுக்கு வழங்கி வருகிறது.

இதுவரை மலேசியாவில் இருந்து ஒரு விமானம் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு இயக்கப்பட்டது தற்போது அதிக விமானங்களை மலேசியாவிலிருந்து தமிழகத்திற்கு வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இயக்குகிறது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்.

ஜூன் மாதத்தில் மட்டும் அதாவது இந்த மாதத்தில் மட்டும் மலேசியாவில் இருந்து தமிழகத்திற்கு 5 விமானங்கள் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இயக்கப்படுகிறது இந்த விமானத்தில் பயணம் செய்ய விரும்புவோர் அதற்கான கால அட்டவணை மற்றும் அவர்கள் எங்கு பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் என்ற விவரங்களை மலேசியாவில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது அவை கீழே வழங்கப்பட்டுள்ளன