சிங்கப்பூரில் இருந்து தமிழகம் செல்லும் வந்தே பாரத் திட்டத்தின் 15 விமான பட்டியலை வெளியிட்டது சிங்கப்பூர் இந்திய தூதரகம்!

உலகம் முழுவதும் ஊரடங்கு காரணமாக சிக்கியுள்ள இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இந்தியா மீட்டு வருகிறது .

வந்தே பாரத் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் விமானங்கள் இந்தியாவிற்கு இயக்கப்படுகின்றன .

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு வெளிநாட்டில் இருந்து இந்தியா செல்லும் வந்தே பாரத் திட்டத்தின் விமான கால அட்டவணைகள் மற்றும் அனைத்து விவரங்களையும் மின்னஞ்சல் மூலம் அந்தந்த நாட்டு இந்திய தூதரகங்கள் பயணிகளுக்கு வழங்கி வருகிறது.

சிங்கப்பூரில் இருந்த இதுவரை வந்த பாரத் திட்டத்தின் மூலம் எந்த ஒரு விமானமும் தமிழகத்திற்கு இயக்கப்படவில்லை.

தற்போது சிங்கப்பூரில் இருந்து தமிழகத்திற்கு வந்தே பாரத் திட்டத்தின் மூலம் 15 விமானங்கள் இயக்கப்படுகின்றன இந்த விமானத்திற்கான விமான பட்டியலை தூதரகம் இன்று வெளியிட்டது.