ஆன்லைன் பாடம் மூலம் கேரளாவில் அசத்திய ஸ்வேதா டீச்சர்.!! யார் தெரியுமா.?

கொரானோ தொற்று முழுவதும் முடியாத நிலையில் தற்போது கேரளாவில் பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று கேரள அரசு முடிவெடுத்துள்ளது. அதேசமயம் பள்ளிகள் திறக்கப்படாததால் பிள்ளைகளுக்கு பாடம் பாதிக்கப்படும் படிப்பு பாதிக்கப்படும் என்று ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் கேரள அரசு விக்டரி சேனல் மூலம் கடந்த ஒன்றாம் தேதி முதல் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடக்க ஆரம்பித்தது. இந்த ஆன்லைன் கிளாசில் முதல் நாளிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஸ்வேதா டீச்சர். இவரது முழுப்பெயர் ஸ்வீத தீலி. கோழிக்கோடு முதுவத்தூர் விவிஎல் பள்ளியில் இவர் ஆசிரியராக வேலை பார்க்கிறார்.

பொதுவாக சிறு குழந்தைகளுக்கு யானை, புலி போன்ற மிருக படங்களை மையமாக வைத்து பாடம் சொல்லித் தருவது வழக்கம். ஆனால் செல்போனில் அதுபோன்ற படங்களை செல்போனில் கொண்டுவர முடியாது இருப்பினும், அது போன்ற உருவங்களை தனது ரியாக்சன் மூலம் கொண்டு வருகிறார், இந்த ஸ்வேதா டீச்சர்.

இதனால் இவர் ஒரே நாளில் மிகவும் பேமஸ் ஆகி விட்டார். இருப்பினும் இவரை குறித்தும் பல சர்ச்சை பேச்சுகளும், கிண்டல்களும் பதிவாகின. இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது அந்த சர்ச்சைகளை கிளப்பியவர்கள் அவர்கள் மாணவர்கள் என்று தெரியவந்தது.

இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிகிறார், இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து அவர் கேள்வி பட்ட பொழுது குழந்தைகளின் படிப்பு தான் நமக்கு முக்கியம், உன் வேலையை நீ சரியாக செய், என்று கூறினாராம். தொடர்ந்து குழந்தைகளுக்கு பாடங்களை சொல்லித்தரும் டீச்சருக்கு வாழ்த்துக்கள்.